🎵 Lyrics
அன்பாய் ஒரு குரல்
அழைக்குதே ஓடிவா
கல்வாரி நாயகன் இயேசு
கரம் நீட்டி அழைக்கிறார்
1. ஆயிரம் ஆயிரம் ஜனங்கள் அழியும் இவ்வுலகில்
ஆண்டவர் இயேசுவின் அன்பினைக் கூறிட
அன்பாய் அழைக்கிறார்
2. பெலவீனர் வறியோர் ஏராளமுண்டு உன் நடுவில்
இயேசுவால் எல்லாம் கைகூடும் என்றிட
அன்பாய் அழைக்கிறார்
3. பாவம் சாபம் சாத்தானின் சகல கட்டினின்று
இயேசுவின் நாமத்தால் மாந்தரை மீட்டிட
அன்பாய் அழைக்கிறார்