🎵 Lyrics
கலங்கித் தவித்ததென் ஆன்மா
என்னைத் தேற்றியவர் இயேசுவே
1. நான் விரும்பாததை என்னில் பார்த்தேன்
நான் விரும்பினது என்னில் இல்லையே
தேவ ஆவியின் வல்லமையால்
வெற்றி தந்தவர் இயேசுவே
2. உன் செயல்களையே பார்க்காமல்
இயேசுவையே நோக்கிப்பார்
பெலவீனம் மறைந்திடுமே
மாறா அன்பு குடி கொள்ளுமே
3. உன்மேல் கண்ணை வைத்து
ஆலோசனை சொல்லிடுவார்
நீ நடக்கும் வழிதனை காட்டிடுவார்
உன் பாரங்களை அவர் மேல் வைத்துவிடு
அவரே பார்த்துக் கொள்வார்