🎵 Lyrics
பரிசுத்த ஜாதியானேன் – நான்
பரிசுத்த ஜாதியானேன்
உம் சாயலால் திருப்தியானேன்
உம்மைப் போல் மாற்றினீரே
1. கள்வர் கையில் நான் அகப்பட்டேன்
குற்றுயிராய் நான் விடப்பட்டேன்
என்னை அணைக்க யாருமில்லை
தேவாதி தேவனே தாழ்த்தி நீரே வந்தீரே
2. வேலியோரத்தில் கிடந்தேனே
இயேசு என் அருகில் வந்திட்டாரே
வாழ்வைப் பெற்றேன் கண்டு கொண்டேன்
இயேசுவையே நான் பின் செல்லுவேன்
நான் வாழ்நாளெல்லாம்
3. வாக்குத்தத்தங்கள் செய்தவரே
வாக்குகள் என்றும் மாறாதவர்
என்றென்றைக்கும் வாழ்கின்றாரே
என்னை தினமும் கரம்பிடித்து நடத்தினார்