Karunaiyum Arulum Ennai

Vazhvin Geethangal #9

Sung By

Sis. Kala Vincent Raj

Share

🎵 Lyrics

கருணையும் அருளும் என்னைத் தொடரும்
வாழ்நாளெல்லாம் அது என்னைத் தொடரும்
ஜீவனுள்ளோர் தேசத்திலே ஜீவனுள்ள
நாட்களிலே
ஜீவனுள்ள தேவனோடு நான் நடப்பேன்

1. கர்த்தரின் வீட்டினிலே -என்றும்
உத்தமமாய் நடப்பேன்
எப்போது என்னிடம் வருவீர் -என
ஏங்கித் தவிக்குது உள்ளம்

2. இருளின் பள்ளத்தாக்கிலே -நான்
நடந்திட நேர்ந்தாலும்
பொல்லாப்பை கண்டு பயப்படேன்
தேவனே என்னோடே இருக்கிறீர்

3. கன்மலையே எந்தன் மீட்பரே -என்
வாயின் வார்த்தைகளும்
இதய தியானமெல்லாம் -உமக்கு
பிரியமாய் இருப்பதாகரே.