🎵 Lyrics
கண்ணை உண்டாக்கினவர் காணாரோ?
காதை உண்டாக்கினவர் கேளாரோ?
1. எனது கால்கள் சறுக்கிடும் போது
கிருபையால் என்னைத் தாங்கிடும் தேவன்
எனது அடைக்கலம் புகலிடம் தேவன்
நம்பியிருக்கும் கன்மலை தேவன்
2. உள்ளத்தில் வேதனை பெருகிடும் போது
ஆறுதலால் என்னைத் தேற்றிடும் தேவன்
எனது துணையும் பெலனும் என் தேவன்
என்னைக் கைவிடா கன்மலை தேவன்
3. எனது உள்ளம் கதறிடும் போது
நெருங்கி வந்து உதவிடும் தேவன்
எனது கண்ணீரைக் காண்கின்ற தேவன்
எனது ஜெபத்தைக் கேட்கின்ற தேவன்