🎵 Lyrics
என்னை வாழ வைப்பவர் இயேசு
என் வாழ்வை மாற்றுபவர் இயேசு – என்னை
1. காடு மேடு ஓடினேன்
முட்புதரில் சிக்கித்தவித்தேன்
என்னைத் தேடித்தேடி வந்தார் – அன்பாய்
தூக்கி அணைத்துக் கொண்டார்
2. தூரதேசம் ஓடினேன் – என்னை
தூக்கிய அன்பை மறந்தேன்
மனம் திரும்பி ஓடி வந்தேன்
என்னை திரும்ப அணைத்துக் கொண்டார்
3.காடு மேடு ஆனாலும்
கஷ்டம் நஷ்டமானாலும் – இனி
அப்பாவோடு இருப்பேன் – அவர்
அன்பை விட்டு விலகேன் – என்னை