🎵 Lyrics
உம்மைப் பிரிந்து எங்கே போவேன்
உம்மை மறந்து எப்படி வாழ்வேன்
உம்மை மறந்த நாட்களை நினைத்து
கண்ணீரோடு உம் பாதம் வருவேன்
இயேசுவே…இயேசுவே….இயேசுவே
1. நிந்தைபட்ட நாளுக்கு சரியாய்
துன்பப்பட்ட நாளுக்கு சரியாய்
உயர்த்தி என்னை நிறுத்தினீரே
உம்மோடு என்னை அணைத்துக்
கொண்டீரே (இயேசுவே)
2. மாலைப்பொழுதில் அழுகை என்றாலே
காலைப்பொழுதில் அக்களிப்பாமே
கண்ணீர் துடைத்து கரை சேர்த்தீரே
காருண்யத்தாலே இழுத்துக்
கொண்டீரே (இயேசுவே)
3. கடந்து வந்த பாதையில் எல்லாம்
கைவிடாமல் கரம் பிடித்தீரே
இம்மட்டும் என்னை நடத்தினீரே
இனிமேலும் வழிநடத்துவீரே (இயேசுவே)