🎵 Lyrics
காலைதோறும் கர்த்தரின் பாதம்
நாடி ஓடிடுவேன்
கல்வாரி நேசர் எனக்கு உண்டு
கலக்கம் இல்லை என் மனமே
அனுபல்லவி
மனமே ஏன் கலங்குகிறாய்
மனமே ஏன் தியங்குகிறாய்
ஜீவனுள்ள தேவன் மீது
நம்பிக்கை வை
1. மானானது நீரோடையை வாஞ்சிப்பது போலவே
என் தேவன் மேல் ஆத்துமா
தாகமாய் இருக்கிறதே – 2
2. வியாதியோ வறுமையோ துன்பமோ துக்கமோ
அவை அனைத்தையும் நான் மேற்கொள்வேன்
இயேசுவின் நாமத்தினால் – 2
3. அழைத்தவர் நடத்துவார் அச்சமே இல்லையே
எல்லா தடைகளை நீக்கிடும்
அவர் சமூகம் முன் செல்லுமே – 2