🎵 Lyrics
உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
வாய்க்காதே போகும்
காக்கும் தேவன் கூட இருப்பார்
கலங்காதே மகனே
1. தண்ணீரை நீ கடக்கும் போது
தேவன் வருவாரே
ஆறுகளை நீ கடக்கும் போது
கூட இருப்பாரே
2. பாடுகள் பட்டால் பரலோகம்
உண்டு மறவாதே மனமே
பரமன் இயேசு பாரினில் உனக்கு
மேன்மை தந்திடுவார்
3. உனக்கெதிராய் எழும்பும் யாவரும்
உன் சார்பாய் வருவார்கள்
உன் மேல் அன்பாய் நானிருப்பதை
அவர்கள் அறிவார்கள்