Yacobe Unnai

Vazhvin Geethangal #15

Sung By

Sis. Kala Vincent Raj

Share

🎵 Lyrics

யாக்கோபே! உன்னை தத்தளிக்கப் பண்ணுவாரில்லை
இஸ்ரவேலே! உன்னை கலங்கிடப் பண்ணுவாரில்லை
உன்னை இரட்சிக்கவும், உன்னை தப்புவிக்கவும்
நான் உன்னோடு இருக்கின்றேன்
நீ தீங்கிலிருந்து தப்புவாய்
சுகித்து அமர்ந்திருப்பாய்

1. என் மகனே எப்பிராயீமே
உன்னை எப்படிக் கைவிடுவேன் – 2
உருக்கமாய் இரங்குவேன்
உன் புலம்பலை நான் கேட்டேன் – 2 – உன்னை

2. ஆபத்திலே நீ என்னை நோக்கி
கதறிக் கூப்பிட்டால்
பலத்தவன் கைகளிலிருந்து
உன்னை நானே விடுவிப்பேன் – உன்னை

3. உன் சிறையிருப்பை, உன் கட்டுக்களை
நான் இன்றே உடைத்தெறிவேன்
நானே உனக்கிதை சொன்னேன்
அதை செய்தே முடித்திடுவேன்

4. உலர்ந்து போன எலும்புகளை
நான் உயிர்பெற செய்திடுவேன்
அதில் ஆவியை அனுப்பிடுவேன்
பெரும் சேனையாய் எழுப்பிடுவேன்