🎵 Lyrics
சீயோன் குமாரத்தியே கெம்பீரித்துப்பாடு
மகிழ்ந்து களிகூரு
உன்னை நிமிர்ந்து நடக்கச் செய்பவர்
உன் அருகில் வந்துவிட்டார்
கலங்கிட வேண்டாம் தளர்ந்திட வேண்டாம்
கண்ணீரைத் துடைத்திடுவார்
1. கண்களை ஏறிட்டு பரலோகத்தை
பார்க்கும் உனக்கு பதிலுண்டு
புத்தியும் மகிமையும் தேடிவரும்
ராஜ மேன்மையும் திரும்ப வரும்
2. உன் நிலை கண்டு இயேசு – உன்னை
தம்மிடம் அழைக்கின்றார்
பாவங்கள்,சாபங்கள் பலவீனம் நீக்கி
விடுதலை தருகின்றார்
3. அவர் உன் ஆக்கினை அகற்றினார்
அவர் உன் சத்துரு விலக்கினார்
கர்த்தர் உன் நடுவில் இருக்கின்றார்
இனி தீங்கை காணமாட்டாய்