🎵 Lyrics
உம்மை விட்டு எங்கே போவேன் இயேசுவே
உம் சமூகம் இல்லா வாழ்வு இல்லை இயேசுவே
1. நீர் விரும்பும் அனைத்தையும் செய்தருளும்
உம் சித்தம் செய்ய உம்மோடு நான் வருவேன்
2. எனக்கு முன்னே செல்லும் உந்தன் பிரசன்னம்
எதிரிகளை விழத்தள்ளும் பிரசன்னம்
3. நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்
உம்மையன்றி ஜீவனுக்கு வழியேது
4. எனக்கு நீர் செய்த நன்மை ஏராளம்
நன்மைகளுக்கு நன்றி நான் சொல்லுகிறேன்