Nallavaram Yesuve

Vazhvin Geethangal #16

Sung By

Bro. Daniel Vincent

Share

🎵 Lyrics

நல்லவராம் இயேசுவே
நன்மை செய்தீர் இயேசுவே
நன்றி சொல்லி பாடிடுவேன்
நாளெல்லாம் நடத்திடும்
நாயகனாம் இயேசுவே
நன்றி சொல்லி பாடிடுவேன்

1. வருஷத்தை நன்மையால் முடிசூட்டினீர்
வாழ்நாளெல்லாம் களிகூர கிருபை செய்தீரே – 2
நன்றி (3) நன்றி தேவா நன்றி – நல்லவராம்

2. கடந்திட்ட நாட்களில் கண்மணிபோல
கருத்துடன் என்னை காத்துக் கொண்டீரே

3. கேட்டதெல்லாம் அன்புடன் தந்தீரய்யா
குறைகளை நிறைவாக்கி நடத்தினீரே

4. எந்தன் சிறுமையை கண்ணோக்கினீர்
தாழ்விலே நினைத்து உயர்த்தினீரே