Akkini Kattru

Vazhvin Geethangal #18

Sung By

Sis. Kala Vincent Raj, Bro. L. Vincent Raj

Share

🎵 Lyrics

அக்கினி காற்று வீசுதே
ஆவியின் மழை இங்கு பொழிகின்றதே
பாத்திரம் நிரம்பி வழிகின்றதே
பாடி உம்மைத் துதிக்கையிலே

அசைவாடும் ஆவியே அனல்மூட்டும் தெய்வமே
அசைவாடும் ஆவியே என்னை நிரப்பும் தெய்வமே

1. தாகமுள்ள அனைவருக்கும்
ஜீவத்தண்ணீர் தருபவரே
நீரோடைக்காக ஏங்கும்
மானைப் போல தாகங்கொண்டுள்ளேன் – அசைவாடும்

2. கழுகு போல் பெலனடைய
கர்த்தரே காத்திருக்கிறேன்
சாட்சியாய் நான் வாழ்ந்து
உம்மையே அறிவித்திட – அசைவாடும்

3. வறண்ட நிலம் என்மேல்
ஆறுகளை ஊற்றுமய்யா
ஜீவநதியாய் பாய்ந்து
தேசத்தை வளமாக்கணும் – நான் -அசைவாடும்

4. உலர்ந்த எலும்புகள் போல்
உயிரற்றஎன் வாழ்க்கையில்
ஆவியை ஊற்றுமய்யா – உம்
ஆலயமாய் மாற்றுமய்யா -அசைவாடும்