🎵 Lyrics
என் முகத்தை தேடுங்கள்
என்று சொன்னவரே
உம் முகத்தை தேடிடுவேன்
எந்தன் கர்த்தாவே
1. உம்முக பிரகாசம்
என்னை வாழவைக்கும்
உம்முக வெளிச்சம்தான்
என்னை வழி நடத்தும்
2. உம் முகத்தை தேடியே
தாழ்த்தி ஜெபித்திடுவேன்
பொல்லாத வழிகளையே
விட்டு விலகிடுவேன்
3. முகத்தை காட்டாமல்
முதுகை காட்டிவிட்டோம்
நானும் வீட்டாருமோ
பாவம் செய்துவிட்டோம்
4. உமது முக ஒளியை
என் மேல் பிரகாசியும்
அமைதி, இன்பம் தந்து
சுகமாய் தங்கப்பண்ணும்