
🎵 Lyrics
இந்த பூமியிலே (2)
எனக்கென யாருமில்லை
சொல்லிக் கொள்ள எவருமில்லை
அன்பு காட்ட யாருமில்லை
அணைத்திட ஒருவரில்லை
இயேசைய்யா…உம்மை விட்டால்
எனக்கென யாருமில்லை
ஆதரிக்க ஒருவரில்லை
1. வீட்டின் மேல் அமர்ந்திருக்கும்
தனித்த குருவி போல
வாடுகிறேன் வாடித் தவிக்கிறேன்
துணையாளரே…
தேற்றிட வாருமைய்யா
ஆற்றிட வாருமைய்யா
உம்மை விட்டால் எனக்கென யாருமில்லை
விடுவிக்க ஒருவரில்லை
2. அலைகடல் நடுவிலே
அசைந்தாடும் படகிலே
மருளுகிறேன் மடிந்து போகிறேன்
நங்கூரமே….
அலைகடல் அதட்டுமையா
அக்கரை சேருமையா
உம்மை விட்டால் எனக்கென யாருமில்லை
அண்டிக் கொள்ள ஒருவரில்லை
3. உறவுகள் மறந்தாலும்
உடைமைகள் இழந்தாலும்
நம்புகிறேன் உம்மையே நம்பியுள்ளேன்
என்னுயிரே…
என்னை நடத்துமைய்யா
இறுதிவரை நடத்துமைய்யா
உம்மை விட்டால் எனக்கென யாருமில்லை
வேறேஒரு விருப்பமில்லை