🎵 Lyrics
அதிகாலையில் சீனாய் மலையினில்
என் ஆண்டவரோடு உலாவுவேன்
எந்நாளிலும் என் இயேசுவின்
பாதம் விழுந்து நான் தொழுகுவேன்
1. ஜீவன் தப்ப மலைக்கு ஓடுவேன்
ஜீவனுள்ள ஆண்டவர் சத்தம் கேட்பேன்
சமபூமியில் நான் நிற்பதில்லை
உலகத்தை திரும்பி நான் பார்ப்பதில்லை
2. கன்மலை உச்சியில் ஏறிடுவேன்
கரங்களை உயர்த்தி நான் ஜெபித்திடுவேன்
மகிமையின் பிரசன்னம் என்னை மூடுமே
முகமுகமாய் நான் பேசிடுவேன்
3. மறுரூப மலைக்கு சென்றிடுவேன்
மனம் புதிதாகி வாழ்ந்திடுவேன்
தேவ தரிசனம் பெற்றிடுவேன்
இறங்கி சென்று சேவை செய்வேன்