🎵 Lyrics
என்னை ஆராய்ந்து அறிபவரே
என் நினைவுகள் புரிந்தவரே
என் கண்ணீர்கள் என் கஷ்டங்கள்
எல்லாம் அறிந்தவரே – 2
1. முன்னாகப் போனாலும் உம்மைக் காணேன் – நான்
பின்னாகப் போனாலும் உம்மைக் காணேன்
நான் போகும் பாதைகள் அறிந்தவரே
எனக்குக் குறித்ததை நிறைவேற்றுமே
2. வானத்தில் ஏறினாலும் அங்கேயும் நீர்
பாதாளம் சென்றாலும் அங்கேயும் நீர்
உமக்கு மறைவாய் எங்கே போவேன்
உம்மை விட்டு எங்கே ஓடுவேன்
3. இதயத்தை ஆராய்ந்து அறிந்து கொள்ளும்
சிந்தனைகள் சோதித்து அறிந்து கொள்ளும்
வேதனை உண்டாக்கும் வழிகள் நீக்கி
நித்திய வழியில் என்னை நடத்தும்