Idhuvarai Ummaidhan

Vazhvin Geethangal #20

Sung By

Sis. Kala Vincent Raj

Share

🎵 Lyrics

இதுவரை உம்மைத்தான் நான் நம்பினேன்
இனிமேலும் உம்மையே நம்பிடுவேன்
உம்மை நம்பாமல் யாரை நான் நம்பிடுவேன்
இயேசுவே உம்மை இன்னும் நம்புவேன் – 3

1. தோல் முதலாய் அழுகி
மாமிசம் அழிந்தாலும்
அங்கிருந்து உம்மைக் காண்பேன் – என்
கண்களால் நானே பார்ப்பேன்
என் மீட்பரே உயிரோடு இருப்பவரே
எனக்கும் ஜீவன் தருவீரே – 2

2. சிறையாக்கின யாவரும்
விடமாட்டோம் என்று
கெட்டியாய் பிடித்துக் கொண்டாலும்
என்னை நீர் விடுவிப்பீரே
என் மீட்பரே வல்லமையுள்ளவரே
என் வழக்கை நீர் நடத்துவீரே – 2

3. இமைப்பொழுது கைவிட்டாலும்
உமது முகம் மறைத்தாலும்
என் மேல் மனதுருகுவீரே
உம் கரங்களால் இரட்சிப்பீரே
என் மீட்பரே கிருபையோடிறங்குவீரே
இரக்கங்களால் சேர்த்துக் கொள்வீரே