🎵 Lyrics
துதியின் சத்தத்தை உயர்த்தியே
நன்றி பலி செலுத்திடுவேன்
நான் செய்த பொருத்தனை நிறைவேற்றுவேன்
இரட்சகரை தொழுதிடுவேன்
ஆமென் அல்லேலூயா – 4
1. கர்த்தர் என் பெலனும் கீதமானவர்
அவரே என் இரட்சிப்பானவர்
அவரே என் தேவன், என் தகப்பனவர்
என்றென்றும் உயர்த்திடுவேன்
2. உம் நாமத்தை துதிக்கும் என் உதடுகளின்
கனிகளை தந்திடுவேன்
ஸ்தோத்திர பலிகளை எப்போதுமே
செலுத்தி நான் புகழ்ந்திடுவேன்
3. இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்திடுவேன்
கர்த்தரை தொழுதிடுவேன்
என் கட்டுகளை எல்லாம் அவிழ்த்துவிட்டார்
நன்றிபலி செலுத்திடுவேன்
4. உயிருள்ள நாளெல்லாம் என் தேவனை
உயர்த்தி துதித்திடுவேன்
அவர் செய்த நன்மைகளை நினைத்துநான்
எந்நாளும் உயர்த்திடுவேன்