🎵 Lyrics
கலங்காதே திகையாதே
நான் என்றும் உன்னோடு இருக்கின்றேன்
நீதியின் வலக்கரத்தாலே
நான் உன்னைத் தாங்கிடுவேன்
1. தீங்கின் காலத்திலும்
நெருக்கத்தின் காலத்திலும்
உனக்காக சத்துருக்கு நான்
எதிர்பட்டு சகாயம் செய்வேன்
தோல்வியில்லை வெற்றி உண்டு
பயமில்லை என் கரமுண்டு
2. உனக்கு விரோதமாக
யுத்தம் செய்ய வருவார்கள்
உன்னை ஒரு நாளும்
மேற்கொள்ளமாட்டார்கள்
தப்புவிக்க நான் உண்டு
இரட்சிக்க என் கரம் உண்டு
3. தண்ணீரை கடக்கும் போது
அது உன்மேல் புரளாது
அக்கினியில் நடக்கும் போது
அது உன் மேல் பற்றிடாது
தொடர்ந்து போ நான் உண்டு
நின்றிடாதே என் கரம் உண்டு