🎵 Lyrics
ஒருவராய் அதிசயம் செய்பவரே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
பதினாயிரங்களில் சிறந்தவரே
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
1. பொன்னும் வெள்ளியும் கர்த்தருடையது
பொன்னும் வெள்ளியும் கர்த்தருக்குரியது
கர்த்தருக்குரியதை கர்த்தருக்கு செலுத்துவேன்
தேவனுக்குரியதை தேவனுக்கு செலுத்துவேன் ஓ…ஓ
பொன்னான ஜெபத்தை தேவனுக்கு கொடுப்பேன்
பொன்னான வேத தியானம் தினமும் செய்வேன்
பொன்னான பரிசுத்தம் அவருக்கு கொடுப்பேன்
பொன்னான விசுவாசம் அவரிடம் கொள்வேன்
பொன்னான உபவாசம் அடிக்கடி எடுப்பேன்
பொன்னான நேரமெல்லாம் அவருக்கே தருவேன்
என் இயேசுவே என் தேவனே என் ராஜனே
2. இரட்சிப்பு என்றும் கர்த்தருடையது
வல்லமை என்றும் தேவனுடையது
பூமியும் நிறைவும் கர்த்தருடையது
எல்லா ஆத்துமாவும் அவருடையது ஓ… ஓ
இரட்சிக்கும் தேவனை மகிமைப்படுத்துவேன்
வல்லமை தேவனை மகிமைப்படுத்துவேன்
ஆட்சி செய்பவரை மகிமைப்படுத்துவேன்
கிரயம் கொடுத்தவரை மகிமைப்படுத்துவேன்
ஸ்தோத்திரம் செலுத்தி மகிமைப்படுத்துவேன்
தேவனுக்கு பயந்து மகிமைப்படுத்துவேன்
என் இயேசுவே என் தேவனே என் ராஜனே
அவர் கிருபை என்றுமுள்ளது