🎵 Lyrics
மகிழ்ந்து பாடிடுவேன்
மன்னவன் இயேசுவையே
உயர்த்தி மகிழ்ந்திடுவேன்
உன்னதர் இயேசுவையே
மகிழ்ந்து பாடுவேன் புகழ்ந்து போற்றுவேன் – 2
இயேசு இயேசு நாமத்தையே
1. தீமைகள் ஒரு நாளும் செய்வதில்லை
தீமைகளை நன்மைகளாய் மாற்றிடுவீர்
என் நேசர் என்னோடு இருக்க
நான் ஏன் அஞ்சிட வேண்டும் – மகிழ்ந்து
2. இலக்கை நோக்கி ஓடிடுவேன்
பரிசை பெற்றிடவே ஓடிடுவேன்
தடைகளை தாண்டி ஓடிடுவேன்
மான்கால்கள் உண்டு ஜெயித்திடுவேன். – மகிழ்ந்து
3. சத்துருவின் கோட்டையை உடைத்திடுவேன்
சர்ப்பங்களை தேள்களை மிதித்திடுவேன்
சாத்தானின் அதிகாரங்கள் ஒருபோதும்
என்மேலே ஜெயமெடுக்க முடியாதே.