🎵 Lyrics
நான் ராஜாவைக் குறித்து
பாடின கவியை சொல்லுகிறேன்
என் ராஜாவைக் குறித்து
பாடின கவியை சொல்லுகிறேன்
என் உள்ளம் அன்பால் பொங்குது
என் உதடும் உம்மை துதிக்குது
என் உடலும் உம்மை வணங்குது
என் உயிரும் உமக்காய் வாழுது
1. வெண்மையும் சிவப்புமானவர் பதினாயிரங்களில் சிறந்தவர்
சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலியே
சாரோனின் ரோஜாவே
என் இயேசு ராஜாவே -நான்
ராஜாவே…. ராஜாவே….ராஜாவே…..
என் இயேசு ராஜாவே
2. உம் காருண்யம் என்னை இழுக்குதே
உம் நேசம் கொடியாய் பறக்குதே
திராட்சை ரசத்திலும் இன்பமே
தேனிலும் அதிக மதுரமே
என் ஆத்ம நேசர் நீரே
உம் பிரியம் என் மேலே -நான் ராஜாவே….ராஜாவே…. ராஜாவே…..
என் இயேசு ராஜாவே
3. உந்தன் நிழலில் அமர்கிறேன்
உந்தன் அன்பில் மகிழ்கிறேன்
என் நேசர் என்னுடையவர்
நானும் உம்முடையவள்
வாரும் என் நேசரே
என் நேசத்தை தந்திடுவேன் -நான் ராஜாவே….ராஜாவே…. ராஜாவே….
என் இயேசு ராஜாவே