🎵 Lyrics
அடோனாய் எங்கள் ஆண்டவரே
யேகோவா எப்போதும் இருப்பவரே
இயேசுவே எங்கள் இரட்சகரே
தூய ஆவியே எங்கள் தெய்வúம
உம்மை வாழ்த்துகிறோம்
உம்மை வணங்குகிறோம்
உம் நாமம் போற்றுகிறோம்
உம் பாதம் பணிகின்றோம்
1. ஏலோஹிம் எங்கும் நிறைந்தவரே
எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்எலியோன் உன்னதமானவரே
எல்ரோயி என்னைக் காண்பவரே
-உம்மை
2. யேகோவாயீரே நன்மைகள் தருபவரே
யேகோவா நிசி வெற்றி தருபவரே
யோகோவா ரஃப்பா சுகம் தருபவரே
யேகோவா ஷாலோம் சமாதானம் தருபவரே
-உம்மை
3. ஆதியந்தம் அல்பா ஒமேகா நீரே
அசைவாடிடும் ஆவியானவரே
ஆலோசனை எனக்குத் தருபவரே
துணையாளரே எந்தன் மணவாளரே -உம்மை