Ungalthanae

Vazhvin Geethangal #25

Sung By

Sis. Kala Vincent Raj, Bro. L. Vincent Raj

Share

🎵 Lyrics

உங்களைத் தானே நம்பி வந்தேன் நான்-ஐயா
உங்களைத் தானே நம்பியிருக்கேன் நான்
உங்க வாக்கை நம்பி வந்தேனய்யா
உங்க பெலத்தை நம்பி வந்தேனய்யா

1. காற்று வீசுது கடலும் பொங்குது
கரை சேர்க்க நீரிருக்க கவலைகள் எனக்கெதற்கு
கடல் மேலே நடந்திடுவேன்
கடலும் கூட தரையாகும்
காற்றும் அடங்கிடும்
கஷ்டமெல்லாம் நீங்கிடும்

2. போட்டி நடக்குது போராட்டமாயிருக்குது
ஜெயம் தர நீரிருக்க பயங்கள் எனக்கெதற்கு
நம்பிக்கையாய் ஜெபித்திடுவேன்
அக்கினி இறங்கி வந்திடும்
கர்த்தரே தெய்வமென்று
ஜனமெல்லாம் வணங்கிடும்

3. வாசல் அடைக்கப்பட்டு தடையாய் இருக்குது
வல்ல தேவன் நீரிருக்க கலக்கம் எனக்கெதற்கு
ஆர்ப்பரித்து துதித்திடுவேன்
அலங்கங்கூட இடிந்துவிழும்
அதிசயம் நடந்திடும்
ஆத்துமாக்கள் கிடைத்திடும்