🎵 Lyrics
தேவனால் எல்லாம் கூடும்
இயேசுவால் எல்லாம் கூடும்
ஆவியால் எல்லாம் கூடும்
எல்லாம் கூடும்
நீ (இதை) நம்பினால் கூடும்
1. முடியாது என்பதை முடியச் செய்பவரே
கூடாது என்பதை கூடச் செய்பவரே
உம்மால் கூடுமே எல்லாம் கூடுமே
உம்மால் ஆகுமே எல்லாம் ஆகுமே
2. முடிந்தது என்பதில் துவக்கம் தருபவரே
உலர்ந்தது என்பதில் புது உயிர் தருபவரே
உம்மால் கூடுமே எல்லாம் கூடுமே
உம்மால் ஆகுமே எல்லாம் ஆகுமே
3. தீராத நோய் நீக்கி சுகத்தை தருபவரே
திருந்தாத எவரையும் திருந்தச் செய்பவரே
உம்மால் கூடுமே எல்லாம் கூடுமே
உம்மால் ஆகுமே எல்லாம் ஆகுமே