
🎵 Lyrics
என்றென்றைக்கும் என்னோடு கூட இருப்பவரே
சத்திய ஆவியான தெய்வமே
உம்மை வாயார வாழ்த்துகிறேன்
மனதார போற்றுகிறேன்
(எங்கள்) பரிசுத்த ஆவியானவரே
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே -2
1. மிகவும் சிறந்த ஆலோசகராய் இருப்பவரே
யோசனையில் பெரியவராய் இருப்பவரே
செயல்களில் மகத்துவரே உதவி செய்பவரே-2
என் கரம் பிடித்து வழிநடத்தும் நண்பரே-2
-ஆராதனை
2. கண்ணீர் துடைத்து கவலை மாற்றும் தகப்பனே
ஆற்றி தேற்றி அரவணைக்கும் தெய்வமே
வழக்காடுகின்றீர் ஜெயம் தருகின்றீர்-2
வரப்போகும் காரியங்கள் தெரிவிக்கின்றீர்-2
-ஆராதனை
3. அபிஷேகத்தின் நதியாக என்னில் பாய்கின்றீர்
நீச்சல் ஆழம் என்னைக் கொண்டு செல்கின்றீர்
அன்பில் களிகூருவேன்,வாழ்வில் செழித்திடுவேன்-2
உம் நதியில் நீந்தி நீந்தி மகிழ்ந்திடுவேன்-2
-ஆராதனை