Neethiyin Vasalgalae

Vazhvin Geethangal #26

Sung By

Sis. Kala Vincent Raj

Share

🎵 Lyrics

நீதியின் வாசல்களே – உங்கள்
தலைகளை உயர்த்துங்கள்
மகிமையின் ராஜா வருகிறார்
மாட்சிமை தேவன் வருகிறார்

அல்லேலூயா பாடுங்கள் ஆர்ப்பரித்து பாடுங்கள்
இயேசு ராஜா வருகிறார்

1. வெற்றியின் வேந்தன் வருகிறார்
வீரமுழக்கம் இடுகிறார் – நீதியின்
செங்கோலை, ஏந்தியே வருகிறார்
வெள்ளைக் குதிரைமேல் வருகிறார்
-அல்லேலூயா

2. யூதாவின் சிங்கம் வருகிறார்
தாவீதின் வேர் வருகிறார் – வருகிறார்
வருகிறார், சீக்கிரம் வருகிறார்
இயேசு ராஜா வருகிறார்
-அல்லேலூயா

3. மணவாளன் இயேசு வருகிறார்
மேகங்களுடனே வருகிறார் – எக்காளம்
தொனித்திட மேசியா வருகிறார்
ஜெயக்கிறிஸ்து வருகிறார்
-அல்லேலூயா