
🎵 Lyrics
அஞ்சிடாதே நீ அழுதிடாதே நீ
உன் ஜெபம் கேட்கப்பட்டது
உன் வேண்டுதல் கேட்கப்பட்டது
1. எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
எத்தனை நாட்கள் சென்றாலும்
காலம் வரும் வரை காத்திருந்தாய்
நம்பிக்கையோடு காத்திருந்தாய்
(பொறுமையோடு நீ காத்திருந்தாய்)
அஞ்சிடாதே அழுதிடாதே
என் மகளே என் மகனே
2. மறைவாக நீ செய்த ஜெபங்களுக்கு
பகிரங்கமாய் நான் பலனளிப்பேன்
(எல்லோர் முன்பும் பதில் தருவேன்)
இரட்டிப்பான நன்மை தந்திடுவேன்
இன்றைக்கே உனக்கு தந்திடுவேன்
அஞ்சிடாதே அழுதிடாதே
என் மகளே என் மகனே
3. எண்ணி முடியாத அதிசயங்கள்
கிரகிக்க முடியாத அற்புதங்கள்
(நம்ப முடியாத அற்புதங்கள்)
உனக்காக நானே செய்திடுவேன்
உன்னைக் கொண்டு செய்திடுவேன்
அஞ்சிடாதே அழுதிடாதே
என் மகளே என் மகனே