🎵 Lyrics
ஆவியே வாரும் அக்கினியே வாரும்
என்னை அனலாய் மாற்றிடும்
ஆவியே வாரும் காற்றாய் வாரும்
என்னை உமக்காய் நிறுத்திடும்
1. கர்த்தரின் கை எலியாவின் மேலே
ஆகாபுக்கு முன்பாய் ஓடச் செய்தீர்
கர்த்தரின் கை என்மேலே மேலே,
எதிரிக்கு முன்பாய் ஓடச் செய்யும்
2. என்னை இழுத்துக்கொள்ளும் இயேசுவை
உமக்குப் பின்னே ஓடி வருவேன்
மாயையை நீக்கி மன்னவர் பாதத்தில்
மரணம் வரைக்கும் உண்மையாய் இருப்பேன்
3. உம்மை பகைப்போர் அழிந்தே போவார்
சூரியனைப் போல நான் ஜொலித்திடுவேன்
மகிமையாய் கர்த்தர் வெற்றி சிறந்தார்
மகிழ்ந்து அவரை பாடி புகழ்வேன்