🎵 Lyrics
எப்படியாகிலும் என் இயேசு
எனக்கு உதவிகள் செய்திடுவார்
நான் போகும் பாதை அறிவார்
என் கண்ணீர்கள் துடைத்திடுவார்
எனக்கு நிழலாய் வந்திடுவார்
1. சூழ்நிலைகள் மாறினாலும், இயேசு மாறிடார்
மனிதர்கள் மாறினாலும், இயேசு மாறிடார்
நண்பர்கள் மறந்தாலும், இயேசு மறந்திடார்
நன்மை பெற்றோர் மறந்தாலும், இயேசு மறந்திடார்
2. தேவையோ ஐயாயிரம், இயேசு இருக்கிறார்
இருப்பதோ ஐந்து அப்பம், இயேசு இருக்கிறார்
பெலவீன நேரமதில், இயேசு தாங்குவார்
வியாதிகள் வேதனையில், சுகமெனக்கருள்வார்
3. ஆபத்து காலத்திலே, இயேசு விடுவிப்பார்
இக்கட்டு நேரத்திலே, இயேசு விடுவிப்பார்
யார் என்னைக் கைவிட்டாலும், இயேசு கைவிடார்
துன்பம் தொல்லை வந்தாலும், இயேசு கைவிடார்