🎵 Lyrics
அசைக்கப்படுவதில்லை -நான்
அசைக்கப்படுவதில்லை
பெருவெள்ளம் வந்து பெரும் காற்று வீசி
என் மீது மோதினாலும் அழிவதில்லை
காரணம் என் இயேசுவே
நம்பிக்கை என் இயேசுவே
கன்மலை என் கிறிஸ்துவே
அஸ்திபாரமும் கிறிஸ்துவே
1. நோவாவுக்கோ கர்த்தரின் கண்களில் கிருபை கிடைத்தது
பெருவெள்ளம் வந்து பூமியே அழிந்தும் குடும்பமே பிழைத்தது
கிருபையை பெற்றிடுவேன் தேவனோடு நடந்திடுவேன்
அசைக்கப்படுவதில்லையே-நான்
அழிந்து போவதில்லையே
2. சத்துருக்கள் என்னை மேற்கொள்ள விடாமல் கைதூக்கினீரே
நான் குழியில் இறங்காமல் உயிரோடு காத்தீர் உம்மையே போற்றுவேன்
கோபமோ ஒரு நிமிஷம் உம் தயவோ வாழ்நாளெல்லாம்
அசைக்கப்படுவதில்லையே-நான்
அழிந்து போவதில்லையே
3. எனக்கு முன்பாக கர்த்தரையே வைத்து இருக்கிறேன்
அவரே என் இரட்சிப்பும் உயர்ந்த அடைக்கலம் கன்மலையானாரே
எக்காலமும் நம்பிடுவேன் இதயத்தை ஊற்றிடுவேன்
அசைக்கப்படுவதில்லையே-நான்
அழிந்து போவதில்லையே