🎵 Lyrics
தேவனே எந்தன் தேவனே
இராஜனே என் இயேசு ராஜனே
உம்மாலே ஆகாதது ஒன்றுமே இல்லையப்பா-2
இல்லையப்பா இயேசப்பா
1. காயப்பட்ட கரத்தினாலே
கண்ணீரைத் துடைப்பவரே
காலமெல்லாம் உடனிருந்து
தோள்மேலே சுமப்பவரே
காண்பவரே காப்பவரே – தேவனே
2. நம்பிக்கையின் நங்கூரமே
கலங்கரை ஒளிவிளக்கே
நம்பி வந்த எங்களுக்கு
நல்வாழ்வு கொடுப்பவரே
நல்லவரே வல்லவரே – தேவனே
3. காலையில் அழுகை என்றால்
மாலையில் அக்களிப்பு
மகிமையின் ராஜன்
தருகின்ற அன்பளிப்பு
அக்களிப்பு அது அன்பளிப்பு – தேவனே