🎵 Lyrics
எழுப்புதலின் புதிய ஆண்டு தொடங்கி விட்டது
செழுமையான நாட்கள் இன்று மலர்ந்து விட்டது
வெற்றி வேந்தன் முன்னே வீரர் நாமும் பின்னே
கரம் பிடித்த கர்த்தரை நாம் தொடர்ந்து செல்லுவோம்
1. அதிசயங்கள் காணப்போகும் ஆண்டு இதுதான்
சுகவாழ்வு துளிர்க்கப் போகும் வருஷம் இதுதான்
துக்க காலம் முடிந்து போகும் நாளும் இதுதான்
தூய தேவன் ஆசீர்தரும் நேரம் இதுதான்
2. தண்ணீரைக் கடக்கும் போது தேவன் இருப்பார்
சோதனைகள் வரும் போது தப்புவிப்பார்
கர்த்தர் வெளிச்சம் உன் மேலே உதித்து விட்டது
காரிருளும் உன்னைக் கண்டு அஞ்சி ஓடுது
3. மக்கள் வெள்ளம் மந்தையைப் போல பெருகப் போகுது
மன்னர் இயேசு நாமத்தையே புகழப் போகுது
தேவதூதர் எக்காளம் காதில் கேட்குது
தேவ ஜனம் கர்த்தரோடு செல்லப் போகுது