🎵 Lyrics
எந்தன் நேசரைக் காண
என் உள்ளம் ஏங்குதே
அவர் அன்பின் மிகுதியால்
உள்ளம் பொங்குதே
மாரா நாதா சீக்கிரம் வருவார்
அல்லேலூயா
1. கறைகள் யாவும் நீங்கி
நானும் பரிசுத்தம் ஆகிடுவேன்
இயேசு இரத்தம் என்னை மீட்டு
சேர்த்திடுமே பரலோகம்
2. கிறிஸ்துவின் மகிமை நாளில்
நானும் மறுரூபம் ஆகிடுவேன்
அவருடன் ஆனந்தமாய்
சென்றிடுவேன் பரலோகம்
3. கவலை கண்ணீர் இல்லை
இயேசு ராஜா அங்கிருப்பார்
ஜீவ ஒளி சந்தோஷமே
அது தானே பரலோகம்