Engal Aaraathanai

Vazhvin Geethangal #18

Sung By

Sis. Kala Vincent Raj

Share

🎵 Lyrics

எங்கள் ஆராதனைக்குரியவரே
எங்கள் ஆராதனை நாயகரே
ஆராதனையில் மகிழ்பவரே
ஆராதிப்போம் உம்மையே -2 – எங்கள்

இயேசுவே கிறிஸ்தேசுவே
உம் நாமம் வாழ்க
பரலோக ராஜனே
உம் அரசு வருக

1. ஆட்சியும் மாட்சியும் உமக்குத்தானே
ஆண்டவரே என்றும் உமக்குத்தானே
போற்றிப் புகழ்ந்து பாடித்துதித்து
உம்மையே உயர்த்திடுவோம் – இயேசுவே

2. வல்லமை மிக்க அரசர் நீரே
வழிநடத்தும் நல்ஆயன் நீரே
வாழ்த்தி வணங்கி பணிந்து குனிந்து
உம்மைத் தொழுதிடுவோம் – இயேசுவே

3. நன்றியுடன் புகழ் பாடிடுவோம்
நாள்தோறும் நீதியைக் கொண்டாடுவோம்
நல்லவர் நீரே பெரியவர் நீரே
களிகூர்ந்து மகிழ்ந்திடுவோம் – இயேசுவே