🎵 Lyrics
என்னால் என்ன முடியும் – அப்பா
உம்மால் எல்லாம் முடியும்
உம் கரத்தினாலே ஆகாதது
ஒன்று கூட இல்லை இயேசப்பா
1. செங்கடலை நீர் திறந்திட்டால்
அது எனக்கு முன்பாய் வழி திறக்குமே
எரிக்கோவை நீர் வீழ்த்தினால்
அது எனக்கு முன்பாய் விழுந்து கிடக்குமே
2. காற்றை நீர் கடிந்து கொண்டாலே
அதன் சீற்றமெல்லாம் அமைதியாகுமே
கொந்தளிப்பை நீர் அதட்டினால்
அது அமைதியாகி அடங்கிப் போகுமே
3. ஐசுவரியம், கனமும், மகிமையும்
உம் முன்னின்று இறங்கி வருகுதே
மேன்மைப்படுத்த பெலப்படுத்திட
உம் கரத்தினாலே ஆகும் இயேசப்பா