🎵 Lyrics
எழும்பு எழும்பு சீயோனே எழும்பு
வல்லமையை இன்று தரித்துக்கொள்
எழும்பு எழும்பு சீயோனே எழும்பு
இயேசுவையே இன்று அணிந்துகொள்
1. தூசியை தட்டி எழுந்திரு
தூக்கத்தைவிட்டு எழுந்திரு
அசுத்தன் உன்னிடம் வருவதில்லை
பரிசுத்தர் உன்னிடம் வந்துவிட்டார்
2. முழு இதயத்தோடு வந்திடு
முழங்கால்படியிட்டு தந்திடு
தளர்ந்த கைகளை திடப்படுத்து
தள்ளாடும் முழங்காலை பெலப்படுத்து
3. கற்றுக் கொள்ள என்னிடம் வந்திடு
கவலைகள் எல்லாம் எறிந்திடு
நித்திய வெளிச்சமாய் நான் இருப்பேன்
துக்க நாட்களை முடித்திடுவேன்
4. எழும்பி பிரகாசி என் மகளே
உன் ஒளி இன்று வந்ததே
எந்தன் மகிமை இறங்கி வருகுதே
காரிருள் விலகி ஓடிப்போகுதே