🎵 Lyrics
இம்மட்டும் காத்து நடத்தினீரே
இனிமேலும் காத்து நடத்துவீரே
ஜீவனுள்ள தேவனே ஜீவனுக்குள் வாழ்பவரே
உமக்கே ஆராதனை – 2
1. நான் நம்பும் தேவனும் நீர்
எந்தன் அடைக்கலம் நீர்
எந்தன் கோட்டையும் துருகமும்
பெலனும் தஞ்சமுமானவர் நீர்
2. எந்தன் ஜீவனும் நீர்
ஜீவனின் பெலனுமே நீர்
ஆடுகளுக்காக தன் ஜீவன் ஈந்த
நல்ல மேய்ப்பனும் நீர்
3. எந்தன் ஆதரவும் நீர்
எந்தன் கேடகமும் நீர்
கர்த்தர் என் வெளிச்சமும் இரட்சிப்புமானீர்
யாருக்கு பயப்படுவேன்
4. எந்தன் கன்மலையும் நீர்
துதிகளின் பாத்திரர் நீர்
ஆலயத்தில் நான் அபயம் இட்டால்
என் கூக்குரல் கேட்பவர் நீர்