🎵 Lyrics
மகளே உன் இதயத்தை தா – என்
மகனே உன் இதயத்தை தா
அதில் நான் வந்து தங்கிட
உனை நடத்தி சென்றிட
மகளே(னே) உன் இதயத்தை தா – என்
1. மாய உலகத்தை பார்த்திட்ட உன் வாழ்வில்
மாறா அன்பு நானே என்று அழைக்கின்றேன்
வாலிப நாட்களிலே என்னிடம் வந்திடு
வாழ்வை வளமாக்கி தந்திடுவேன் நம்பிடு
இயேசு என்று கூப்பிடும் உந்தன்
குறைகளை நீக்கிடுவேன்
குற்றம் யாவும் நீக்கி உன்னை
தூய்மைப் படுத்திடுவேன்
சஞ்சலம் யாவும் நீக்கி உன்னில்
சந்தோஷம் தந்திடுவேன்
சார்ந்து வாழும் உன்னை இன்று
உயர்த்தியே காட்டுவேன் – என்னை (மகளே)
2. நொறுங்கிப்போன உந்தன் வாழ்க்கை நடுவினிலே
நல்ல நேசராக நான் வந்து தங்கிடுவேன்
சோர்ந்து போகாமல் தினம் உன்னை நடத்துவேன்
சோதனைகள் சகித்திட பெலன் உனக்கு தந்திடுவேன்
இயேசு என்று கூப்பிடும் உந்தன்
வேதனை நீக்கிடுவேன்
ஆபத்து நேரம் உனக்காய் நானே
எழுந்து நின்றிடுவேன்
சத்துரு யாவும் நீக்கி உனக்கு
வெற்றி தந்திடுவேன்
சாட்சியாய் நீயும் வாழ்ந்திட
உனக்கு உதவி செய்திடுவேன் (மகளே)