Merkollavum

Vazhvin Geethangal #20

Sung By

Bro. Joseph Manasseh

Share

🎵 Lyrics

மேற்கொள்ளவும் எதிர்கொள்ளவும்
திராணி தருபவர்
இயேசுராஜா உம் புகழை
பாடச் செய்பவர்
நீர் நல்லவர் வல்லவர்
பெரியவர் நீர் பரிசுத்தர் – 2

1. செங்கடலை பிளந்ததும் கரமல்லவோ
எரிக்கோவை வீழ்த்தியதும் கரமல்லவோ
யோர்தானை பிரித்ததும் கரமல்லவோ
எதிரிகளை தாழ்த்தியதும் கரமல்லவோ
– நீர் நல்லவர்

2. மன்னாவைப் பொழிந்ததும் கரமல்லவோ
காடைகளை குவித்ததும் கரமல்லவோ
குறைவுகளை நிறைவாக்கும் கரமல்லவோ
தேவைகளை சந்தித்திடும் கரமல்லவோ
– நீர் நல்லவர்

3. அற்புதங்கள் செய்திடும் கரமல்லவோ
அதிசயம் செய்திடும் கரமல்லவோ
சகலத்தையும் சிருஷ்டிக்கும் கரமல்லவோ
சாத்தானை துரத்திடும் கரமல்லவோ
– நீர் நல்லவர்

4. வியாதிகளை நீக்கிடும் கரமல்லவோ
வேதனை நீக்கிடும் கரமல்லவோ
ஆணிகளை ஏற்றுக்கொண்ட கரமல்லவோ
ஆறுதல் செய்திடும் கரமல்லவோ
– நீர் நல்லவர்