🎵 Lyrics
நான் துதிக்கும் தேவனே நீர்
மவுனமாயிராதேயும்
கதறிச் சொல்லும் வார்த்தைகளை கவனியும் – நான்
1. என் ஏக்கங்களெல்லாம் உமக்கு முன்னே இருக்குது
என் தவிப்பெல்லாம் உமக்கு மறைவாயில்லை
என் உள்ளம் குழம்பி அலைகிறதே
என் பெலன் என்னிலே இல்லையே
2. உமது கோபத்தால் எனக்குள் ஆரோக்கியம் இல்லை
எனது பாவத்தால் எலும்பில் சுகமில்லை
தலைக்கு மேலே அக்கிரமம் பெருகினதே
தாங்க முடியா பாரச் சுமையானதே
3. நான் வேதனைப்பட்டு என்னில் ஒடுங்கி போனேன்
துக்கத்தோடே நாள் முழுதும் திரிகிறேன்
கர்த்தாவே என்னைக் கைவிடாதேயும்
எனக்கு உதவி செய்ய சீக்கிரம் வாரும்