🎵 Lyrics
நம்பிக்கையுடைய சிறைகளே
அரணுக்கு திரும்புங்கள்
இரட்டிப்பான நன்மை தந்திடுவேன் – அதை
இன்றைக்கே தந்திடுவேன்
1. வார்த்தையைக் கொண்டு திரும்புங்கள்
உங்கள் வாழ்க்கை வளமாகும்
முழு இதயத்தோடு திரும்பிடுங்கள்
உங்கள் முகங்கள் மலர்ந்து விடும்
2. இழந்ததை மீண்டும் பெற்றிடுங்கள்
இன்பமாக வாழ்ந்திடுங்கள்
இன்முகத்தோடு திரும்பிடுங்கள்
உங்கள் இன்னல் மறைந்து விடும்
3. தைரியமாக வந்திடுங்கள் – நான்
தயவாய் அணைத்திடுவேன்
முத்திரை மோதிரம் தந்திடுவேன்
அதை உலகமே அறியச் செய்வேன்