🎵 Lyrics
நான் உம்மை விடுவதில்லை
நீரே என் தேவை
நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய
உம்மை போகவிடுவதில்லை
உம்மை விடுவதில்லை…..போகவிடுவதில்லை
1. மாலை நேரம் ஆகிறது
பொழுதும் சாய்கிறது
இயேசுவே நீர் என்னோடு தங்கிடும்
என்னை விட்டு போகவேண்டாம்
2. கல்லறையில் உம்மைக் காணவில்லை
காவலர் சுற்றி நிற்கிறார்
இயேசுவே நீர் எனக்கு வேண்டும்
என்னை விட்டு போகாதிரும்
3. நீர் வராமல் நான் மட்டும் போவதில்லை
வேறெந்த பதிலும் ஏற்பதில்லை
என்னோடு இப்போது வந்து விடும்
எனக்கு அற்புதம் செய்துவிடும்