🎵 Lyrics
நீங்கதாம்பா பார்த்துக் கொள்ளணும்
என்னால் ஒன்றும் முடியாதப்பா
என் பாரங்களை உம்மேலே சுமத்துகிறேன்
ஒரே ஒரு பார்வை வேண்டும் கெஞ்சுகிறேன் – நீங்க
1. வழி நடந்து போகையில் வழி எதுவோ திகைக்கையில்
முன் செல்லும் நல்ல நேசரே
தடுமாறும் வேளையில் தனிமை சூழும் நேரத்தில்
தாங்கிக் கொள்ளும் எந்தன் நேசரே
(இயேசுவே – 4)
2.கதறி அழும் வேளையில் கண்ணீர்விடும் நேரத்தில்
கரங்களாலே அணைத்துக் கொள்ளுமே
காயங்களை ஆற்றியே, என் உள்ளம் தேற்றியே
கைவிடாமல் தூக்கிச் செல்லுமே
(இயேசுவே – 4)
3.மாறிவிடும் உலகினில் மனிதர்களும் பகைக்கையில்
உம் மார்பினிலே சாய்ந்து கொள்ளுவேன்
பாரங்கள் பெருகையில் மனமுடைந்து போகையில்
உம் பாதத்திலே விழுந்து கிடப்பேன்
(இயேசுவே – 4)