Aandavare Aaviyaanavar

Vazhvin Geethangal #15

Sung By

Bro. L. Vincent Raj

Share

🎵 Lyrics

ஆண்டவரே ஆவியானவர்
என்னில் அசைவாடிக் கொண்டிருக்கிறார்
ஒழுங்கற்றதும் வெறுமையுமான
என்னை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் – ஆ ஆ

1. நிலமதனை சுத்தம் செய்கிறார்
களைகளெல்லாம் அகற்றி விடுகிறார்
தூய தண்ணீர் தினமும் விடுகிறார்
கனி தரவே காத்திருக்கிறார் – நான் – ஆ ஆ

2. புதிய இதயம் எனக்குத் தருகிறார்
புதிய ஆவி என்னில் ஊற்றுகிறார்
புது பெலத்தால் நிரம்ப செய்கிறார்
புதுக் கிருபை எனக்குத் தருகிறார் – தினம் ஓ..ஓ

3. குயவன் கையில் களிமண் என்னையே
நேர்த்தியாக வனைந்து விடுகிறார்
பெயரை சொல்லி அழைத்திருக்கிறார்
அனுதினமும் உருவாக்குகிறார் – என்னை – ஆ ஆ