🎵 Lyrics
தேவ ஆவியே எந்தன் மீதிலே
வல்லமையாய் இறங்கிடுமே
பாவ லோகத்தை மேற்கொண்டிட
பலமாய் இறங்கிடுமே
1. வாரும் வாரும் இப்போ இறங்கிவாரும்
செட்டைகள் அடித்து எழும்பி வாரும்
எங்கள் மீது இப்போதே இறங்கி வாரும்
2. உலர்ந்த எலும்பெல்லாம் உயிர்த்திடட்டும்
வறண்ட நிலமெல்லாம் செழித்திடட்டும்
வல்லமையாய் இப்போதே இறங்கி வாரும்
3. பரலோக அக்கினியே இறங்கிடுமே
பாவத்தின் வேர்களை எரித்திடுமே
மகிமையின் சாட்சியாய் மாற்றிடுமே
4. ஆவியின் மழை இங்கே ஊற்றிடுமே
ஆவியில் அனலாக மாற்றிடுமே
அன்பரே இப்போதே இறங்கி வாரும்