🎵 Lyrics
தேவனைப் போற்றி பாடுங்கள் பாடுங்கள்
ராஜாவைப் போற்றி பாடுங்கள் பாடுங்கள்
ஆவியோடும் கருத்தோடும்
ஆண்டவர் இயேசுவை பாடுங்கள்
ராஜாதி ராஜாவைப் பாடுங்கள்
அல்லேலூயா பாடிடுவோம்
அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்
1. அரியணையில் அமர்ந்து
அரசாளும் தெய்வம் நீரே
அகிலம் அனைத்தின் ராஜா
நம் இயேசு மகாராஜா
2. வானம் பூமி படைத்தவரே
வாழ்த்தி உம்மை போற்றிடுவோம்
சேனைகளின் கர்த்தர் மிக உயர்ந்தவர்
நம் இயேசு மகா பெரியவர்
3. மகிமைக்குப் பாத்திரரே
துதிகளில் வாழ்பவரே
இரட்சிப்பைத் தந்தவர் நீரே
நம் இயேசு மகா பரிசுத்தர்
4. மகிமையின் ராஜா வானில் வருவார்
மகிழ்ந்து அவருடன் செல்வோம்
ஆயிரம் ஆண்டுகள் ஆள்வோம்
ஆண்டவர் இயேசுவில் மகிழ்வோம்