En Belanagiya

Vazhvin Geethangal #23

Sung By

Sis. Kala Vincent Raj

Share

🎵 Lyrics

என் பெலனாகிய கர்த்தாவே
உம்மில் அன்பு கூருவேன்.
என் பெலனெல்லாம் நீர் தானே
உம்மை ஸ்தோத்தரிப்பேன்.

1. உயரத்திலிருந்தென்னை கைநீட்டி
பெருவெள்ளத்திலிருந்து தூக்கினீர்
வெள்ளங்கள் என்மேல் புரளாமல்
பாதுகாத்துக் கொண்டீர்.

2. நெருக்கத்திலே நான் கர்த்தரையே
நோக்கி அபயமிட்டேன் – என்
கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய்
செவிகளில் ஏறிற்று.

3. வெண்கல வில்லும் வளையும்படி
என் கைகளை பழக்குகிறீர்
என்மேல் எழும்பினவரை – கீழ்
மடங்கப்பண்ணி வெற்றி தந்திடுவீர்.